கால் டாக்சிகளை, ஆம்புலன்ஸ்களாக மாற்றிய சென்னை மாநகராட்சி!

சனி, 15 மே 2021 (11:53 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆம்புலன்ஸ் சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளன. 

 
இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளில் அதிகமான பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கனா நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தமிழக அரசு அறிவித்தது.
 
இதனைத்தொடர்ந்து 250 கால் டாக்சிகளை, ஆம்புலன்ஸ்களாக மாற்றியுள்ளது சென்னை மாநகராட்சி. இந்த சேவையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்