ஆம்புலன்ஸ் கட்டணம் மட்டும் ரூ.1.2 லட்சம்: அதிர்ச்சியில் கொரோனா நோயாளி

சனி, 8 மே 2021 (07:27 IST)
கொரனோ நோயாளியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ரூபாய் 1.2 லட்சம் கட்டணம் பெற்ற தகவல் தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து வரும் கொரனோ நோயாளிகள் மருத்துவமனையில் அட்மிட் ஆகி வருகின்றனர். அந்த வகையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த குருகிராம் என்ற பகுதியில் கொரனோவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார். அந்த ஆம்புலன்ஸ் நிறுவனம் கட்டணமாக ரூபாய் 1.2 லட்சம் கேட்டதை அடுத்து அந்த கொரனோ நோயாளியும் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
குருகிராம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லூதியானா மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளதை அறிந்து அந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அந்த நோயாளி அழைத்துச் செல்லப்பட்டார்
 
ஆனால் லூதியானா சென்றடைந்ததும் ஆம்புலன்ஸ் டிரைவர் 1.2 லட்சம் ரூபாய் ஆம்புலன்ஸ் கட்டணமாக கேட்டது கொரனோ நோயாளிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ்க்கு மட்டும் இவ்வளவு கட்டணமா? என கொரனோ நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்