கோழிக்கறிக்கு பதில் கன்றுக்குட்டி கறியா? சென்னையில் பரபரப்பு

வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (22:31 IST)
சென்னையில் உள்ள ஒருசில உணவகங்களில் கோழிக்கறிக்கு பதில் கன்றுக்குட்டியின் கறி சமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக திடீர் சோதனையில் தெரிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னைபெரியமேடு பகுதியில் உள்ள ஓட்டல்கள் அசைவ உணவுக்கு புகழ் பெற்றது. இங்கு இயங்கும் உணவகங்கள் சில சிக்கன், மட்டன் என்று கூறி கன்றுக்குட்டி கறியில் உணவு சமைத்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்ததால் இன்று மாலை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
 
சோதனை செய்த ஓட்டல்களில் சிக்கன், மட்டன் என விற்பனை செய்யப்பட்ட உணவுகளை சோதனை செய்ததில் அவை கன்றுக்குட்டியின் கறி என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஒருசில ஓட்டல்களில் சுமார் 300 கிலோ கறிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் தரம் குறைந்த மசாலாக்கள் பயன்படுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கன்றுக்குட்டிகளை இறைச்சிக்காக பயன்படுத்த கூடாது என்று விதி இருந்தும் கன்றுக்குட்டி கறிகளை விற்பனை செய்த உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்