அரசு கேபிள் டிவி மூலம் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் ஏராளமான சேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட சில திரைப்படங்களை ஒளிபரப்புவதற்காக தனியாக ஒரு சேனல் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் உள்ளூர் சேனலில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானதாக கூறப்படுகிறது. அப்போது டிவி பார்த்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தர்மபுரி அரசு கேபிள் டிவி தாசில்தார் கூறுகையில், ஆபாச படம் ஒளிபரப்பான சேனல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவுடன், சம்பந்தப்பட்ட சேனலை தொடர்புகொண்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும், இது குறித்து சேனல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.