அஜித்திடம் ஒரு மணி நேரம் பேசினேன்: முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர்..!

திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:22 IST)
அஜித்திடம் ஒரு மணி நேரம் பேசியதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித்தின் தந்தை காலமான நிலையில் அவருக்கு ஆறுதல் கூற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜித்தின் இல்லத்திற்கு சென்றனர். 
 
இந்த சந்திப்பு குறித்து சி விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜித் குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி  அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜூ  அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.
 
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவம் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டும் என்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல்தான் வாழ்க்கை' அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்