நிபந்தனைகள் இன்றி அனைத்து பேருந்துகளும் இயங்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு!

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:47 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்து உள்பட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு இருந்தன இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது 
 
அதன்படி பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் பயணிக்கலாம் என்று சமீபத்தில் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது
 
மேலும் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை அதிகரித்துக்கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி பயணிகளும் இனிமேல் எந்தவித நிபந்தனைகளும் இன்றி அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாஸ்க் அணிவது போன்ற நிபந்தனைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்