டிச. 31 வரை பொது முடக்கம்: இம்முறை வழங்கப்பட்ட தளர்வுகள் என்ன?

திங்கள், 30 நவம்பர் 2020 (09:25 IST)
தமிழத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் இருந்து வரும் நிலைஇல் தற்போது டிசம்பர் 31 வரை மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டு பொது முடக்கம் நீட்டிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
தற்போது வழங்கப்பட்டுள்ள புது தளர்வுகள் பின்வருமாறு... 
1) கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. கல்லூரி விடுதிகளும் செயல்படும். 
 
2. மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளும் செயல்படும். 

3. நீச்சல் குளங்கள், விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4) வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்