கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி தனி விமானம் ஒன்றில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்டோபைலட் முறையில் இயங்கி வந்த அந்த விமானத்தை விமானி சாதுர்யமாக மேனுவல் முறைக்கு மாற்றினார். அவர் இன்னும் 20 நொடிகள் தாமதம் செய்திருந்தால் அந்த விமானம் செங்குத்தாக கீழே விழுந்து நொறுங்கியிருக்கும் என்று இதுகுறித்து விசாரணை செய்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனையடுத்து ராகுல்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்ப்பியது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த பயணத்தின்போது விமானத்தில் கோளாறு என்று தெரிந்தவுடன் ராகுல்காந்தி கைலாசத்தில் உள்ள மான்சரோவருக்கு வருவதாக வேண்டுதல் செய்து கொண்டதாகவும், அந்த வேண்டுதலை நிறைவேற்றவே தற்போது அவர் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது