குரூப் பி அரசு பணியிடங்களை நிரப்புவதில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான பிரிவை ரத்து செய்ததை கண்டித்து அரசு அதிகாரிகளின் உருவபொம்மையை எரிப்பு!

J.Durai

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (12:56 IST)
புதுச்சேரி அரசு சார்பில் குரூப் பி பணியிடங்ளை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில், மிகவும் பின்தங்கிய வகுப்பினர்,அதிகம் பின்தங்கிய வகுப்பினர், பின்தங்கிய இஸ்லாமிய வகுப்பினர், ஆகியோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இதனால் பெரும்பான்மையாக உள்ள 70 சதவீத மக்கள் பாதிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
இதற்கு அரசு அதிகாரிகள் 2 பேர் தான் காரணம் என கூறி பல்வேறு சமூக  அமைப்பினர் அண்ணாசிலை அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், 
அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரசு அதிகாரிகளின்  புகைப்படங்கள் மற்றும் 2 உருவ பொம்மைகளை எரித்தனர் இதனை பார்த்த போலீசார் அதனை பறிமுதல் செய்ய முயற்சி செய்தனர். 
 
இதனால் போலீசாருக்கும் , போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்னொரு உருவ பொம்மையை எரித்து சாலையில் இழுத்துச் சென்றனர் போலீசார் அவர்களை விரட்டி பிடித்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
 
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்