மெல்ல மெல்ல வலுவிழக்கும் புரெவி புயல்! – தமிழகத்தில் நீடிக்கும் மழை!

ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (09:35 IST)
வங்க கடலில் உருவான புரெவி புயல் பாம்பன் அருகே கடலில் நிலை கொண்டிருந்த நிலையில் மேல்ல வழுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருமாறிய நிலையில் இலங்கையை கடந்தது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்ட புயல் கடந்த 4 நாட்களாக நகராமல் இருந்ததால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காற்றின் வேகம் குறையும் என்றாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்