சிக்கன் கிலோ 30 ரூபாய்; சிக்கன் வறுவல் இலவசம் – கோழி வியாபாரிகள் அதிரடி ஆஃபர்!

செவ்வாய், 17 மார்ச் 2020 (09:29 IST)
கோழிக்கறி உண்பதால் கொரோனா பரவுவதாக வெளியான வதந்தியால் மக்கள் கோழிக்கறி வாங்குவதை தவிர்த்து வரும் நிலையில் புதிய உத்தியை கோழிக்கறி வியாபாரிகள் தொடங்கியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா பரவுவதாக வெளியான வதந்தியால் மக்கள் கோழிக்கறி வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி விலை மிகவும் சரிந்துள்ளது. ஒரு கிலோ கோழிக்கறி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. ஆனாலும் மக்கள் கோழிக்கறி வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோழி வியாபாரிகள் கோழிக்கறி வாங்க வருபவர்களுக்கு சிக்கன் வறுவல், பிரியாணி போன்றவற்றை இலவசமாக வழங்க தொடங்கியுள்ளனர். மேலும் சில இடங்களில் பிரியாணி கடைகளே 5 ரூபாய்க்கு பிரியாணி போன்ற ஆஃபர்களையும் அளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்