விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது என்றும் இந்த நிலை தொடர்ந்தால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்கு எதிராக தமிழக விவசாயிகள் செயல்படுவார்கள் என்றும் தமிழக முதல்வருக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
கர்நாடகாவில் உரிய நீரை பெற்று தர கோரி அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று திருச்சியில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த பி ஆர் பாண்டியன் விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல் பட்டு வருகிறது என்றும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
கேரளா அரசின் புதிய அணையை தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர் எந்தவித முயற்சிகளும் எடுக்காமல் மௌனமாக இருக்கிறார் என்றும் அவர் குற்றம் காட்டினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார் என்றும், தேர்தல் நேரத்தில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும் விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக தமிழக அரசு செயல் பட்டு வருகிறது என்றும் பிஆர் பாண்டியன் குற்றம் சாட்டினார்.