சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்குள் வெடிகுண்டுகளுடன் புகுந்த நபரால் பரபரப்பு

புதன், 15 பிப்ரவரி 2023 (21:12 IST)
சுவிட்சர்லாந்து நாட்டு பாராளுமன்றத்திற்குள் ஒரு நபர் வெடிகுண்டுகளுடன் புகுந்ததால் பெறும்பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

சுட்சர்லாந்து பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இக்கூட்டத் தொடரில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர்  சபைத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இன்று நடந்த கூட்டத் தொடரில், பாராளுமன்ற வளாகத்திற்குள் ஒரு மர்ம நபர் வெடிகுண்டுகளுடன் புகுந்தார்.

தெற்கு நுழைவாயிலில் அவரது காரை  தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர் அந்தக் காரை  சோதனை செய்தனர்.

அப்போது, அவரிடம் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரைக் கைது செய்து, அங்கிருந்து வெளியே கொண்டு சென்றனர். பக்கத்து கட்டிடத்தில் இருந்தவர்களையும் வெளியேற்றினர்.

உடனே, தீயணைப்புப் படை, மற்றும் வெடிகுண்டு நபர்கள் வரவழைக்கப்பட்டு, அவரது காரில் வெடிகுண்டு செயலிழக்க வைக்க முயன்றனர். ஆனால், காரில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது. அவர் எப்படி உள்ளே வந்தார் என்ற கோணத்தில்  போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்