சென்னை விமான நிலையம் தனியார் மையம்?

புதன், 15 பிப்ரவரி 2023 (18:51 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக  ஆட்சி நடந்து வருகிறது. ஏற்கனவே பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளை தனியாரிடம் வழங்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை முடிவெடித்துள்ளதாகத் தகவல் வருகிறது.

ALSO READ: பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் காரணம் என்ன? காங்., தலைவர் கேள்வி
 
ஏற்கனவே, தற்போது பங்குச்சந்தையில் மோசடி செய்தாதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியதால்  பங்குகள் சரிவடைந்துள்ள அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சென்னை, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட மொத்தம் 25 விமான நிலையங்கள் தனியாரிடம் வழங்குவதற்கான ஒப்பந்தம் நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்