ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது, பைக்கில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சிகள், "சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டது" என்று குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த விசாரணையின் போது, குண்டு வீசிய சிறுவனை இன்று போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். அந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.