ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம்.. சீமானுக்கு பாஜக பிரபலம் அறிவுரை..!

Mahendran

சனி, 25 மே 2024 (15:26 IST)
நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்று விட்டால் கட்சியை கலைத்து விடுகிறேன் என்று நேற்று சீமான் சவால் விட்ட நிலையில் அதற்கு பாஜகவின் வேட்பாளர் வினோத் செல்வம் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் கட்சியை கலைத்து விடுவதாக வாய்ச்சவடால் விட்டிருக்கும் அண்ணன் 
சீமான்  அவர்களுக்கு வேண்டுகோள்.
 
நாம் தமிழர் கட்சி  டெபாசிட் இழப்பதையும், பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெறுவதையும் உங்கள் கண் முன்னால் பார்க்க இருக்கிறீர்கள்.
 
ஆனால், அதற்கெல்லாம் ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம். தமிழக அரசியல் களத்தில் நகைச்சுவை உணர்வு, கதை சொல்லும் பண்பு போன்றவை காணாமல் போய்விடும்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்