மேகதாது தனி தீர்மானம்: பாஜக ஆதரவு!

திங்கள், 21 மார்ச் 2022 (12:42 IST)
தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது அணை தனி தீர்மானத்தை பாஜக முழுமையாக ஆதரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்தார். கர்நாடகாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தது. 
 
தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது தனி தீர்மானத்தை பாஜக முழுமையாக ஆதரிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ கூறினார். அப்போது சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது, கொண்டுவரப்பட்ட மேகதாது தனி தீர்மானத்தை பாஜக முழுமையாக ஆதரிக்கிறது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசை தமிழ்நாடு பாஜக தனிப்பட்ட முறையில் வலியுறுத்தும் என அவர் உறுதி அளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்