ஏர்வாடியில் இருந்து தப்பித்து வந்தவர் இளங்கோவன்: கீழ்பாக்கம் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாஜக!

திங்கள், 10 ஏப்ரல் 2017 (17:30 IST)
புதுச்சேரி அரசில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே பணிப்போர் வெளிப்படையாகவே நடந்து வருகிறது. இதனையடுத்து புதுவை சட்டசபையில் ஆளுநருக்கு எதிராகவே தீர்மானத்தை நிறைவேற்றினார் நாராயணசாமி.


 
 
இதனால் கோபமடைந்த ஆளுநர் கிரண்பேடி தான் ரப்பர் ஸ்டாம்ப் போல செயல்பட விரும்பவில்லை. புதுவை ஒரு மாநிலம் அல்ல, இது யூனியன் பிரதேசம் இங்கு ஆளுநருக்கே அதிகாரம் அதிகம் என கூறியிருந்தார்.
 
இதனையடுத்து சமீபத்தில் புதுவை முதல்வர் நாரயணசாமியை நேரில் சந்தித்து பேசிய முன்னாள் காங்கிரஸ் தமிழக தலைவர் இளங்கோவன் செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது கிரண்பேடி குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை கூறினார்.
 
ஆளுநர் கிரண்பேடி மனநிலை சரியில்லாதவர் போல் இருக்கிறார். பிரதமர் மோடி அவரை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்புவதற்குப் பதிலாக புதுவைக்கு அனுப்பி வைத்து விட்டார் என்று கூறியிருந்தார் இளங்கோவன்.
 
இந்நிலையில் இளங்கோவன் மீது ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் புதுவை பாஜக உழவர்கரை மாவட்டத் தலைவர் சிவானந்தம் புகார் அளித்துள்ளார். அதில், இளங்கோவன் ஆளுநர் கிரண்பேடியை மனநிலை சரியில்லாதவர், கீழ்பாக்கத்துக்கு அனுப்பப்பட வேண்டியவர் என கூறி இருக்கிறார். இவ்வாறு ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்ததன் மூலம் புதுவை மக்களை அவர் அவமதித்து இருக்கிறார்.
 
எனவே, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், ஏர்வாடியில் இருந்து தப்பி வந்தவர் போல் செயல்படும் இளங்கோவனை ஏர்வாடிக்கே திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்