நோட்டாவுடன் போட்டி போட்ட பாஜகவா இது? அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்!

புதன், 28 அக்டோபர் 2020 (16:39 IST)
நோட்டாவுடன் போட்டி போட்ட பாஜகவா இது?
இந்தியா முழுவதும் பெரும்பாலான வரவேற்பை பெற்றுள்ள பாஜக, தமிழகத்தில் மட்டும் வளராமல் நோட்டாவுடன் போட்டி போடும் அளவிற்கு தான் அந்த கட்சியின் நிலைமை கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்தது. தனியாக நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சியாக இருந்த பாஜக, தற்போது திராவிட கட்சிக்கு இணையாக வளர்ந்து வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமும் திராவிடக் கட்சியினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட கட்சியில் உள்ள 200 ரூபாய் பெய்ட் டுவிட்டர் பயனாளிகள் சிலர் சமூக வலைதளங்களில் சங்கிகள் என அடிக்கடி ஒரு சில பாஜகவினர்களை டார்கெட் செய்து அவர்களை பிரபலமாக்கிவிட்டனர்.
 
ஒரு நபரை நெகட்டிவ்வாக விமர்சனம் செய்தால் அவர் பாசிட்டிவ்வாகவும் பிரபலமாவார் என்பதை அறியாமல் திராவிட கட்சியினர் செய்த விபரீதத்தால் பாஜக தற்போது தமிழகத்தில் பிரமாண்டமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சென்னை உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். திராவிட கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு இணையாக கூட்டம் சேர்ந்து இருப்பதைப் பார்த்து மக்கள் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
நோட்டா உடன் போட்டி போட்ட கட்சியா இது? என்று கூறி வருகின்றனர். ஏராளமான திரை நட்சத்திரங்கள் அக்கட்சியில் இணைந்து வருவதால் வரும் தேர்தலில் அக்கட்சி நோட்டாவை மட்டுமல்ல திராவிட கட்சிகளையும் ஆச்சரியப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்