மனு தர்மம் குறித்த திருமாவளவனின் பேச்சுக்கு பிறகு பாஜக – விசிக இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் பூத் கமிட்டி படிவம் வாங்க பாஜகவினர் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே இருந்த சில விசிகவினருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
வாக்குவாதம் கைகலப்பான நிலையில் விசிகவினர் பாஜகவினரை தாக்கியதுடன், அவர்களது வாகனத்தையும் நொறுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 18 பெண்கள் உட்பட 42 விசிகவினர் மீது கொலை தாக்குதல் முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.