அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், தன்னையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என சசிகலதா ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல், தன்னை கட்டாயப்படுத்தியே ராஜினாமாவை சசிகலா பெற்றுக் கொண்டார். தற்போது என் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என ஆளுநரிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக சட்டசபையில் ஓட்டெடுப்பிற்கே வாய்ப்பு கொடுக்காமல், 356ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அப்படி நடந்தால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்... திமுக தரப்பில் கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக முடங்கியுள்ளார். அதிமுகவின் சக்தியாக விளங்கிய ஜெயலலிதாவும் மரணம் அடைந்து விட்டார்.
எனவே, தமிழகத்தில் தங்களின் தடத்தை பதிய நினைக்கும் பாஜக, நடிகர் ரஜினிகாந்தை களம் இறக்க ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.. பாஜக சார்பாக ரஜினியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க திட்டம் தீட்டி வருவதாகவும், இது தொடர்பாக, பாஜக பிரமுகர் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியின் மூலமாக ரஜினியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது..