தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது: கனிமொழி ஆவேச பேச்சு

புதன், 31 மார்ச் 2021 (18:24 IST)
தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளன/ இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் 
 
அந்த வகையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் தோல்வி பயம் காரணமாக பிரதமர் உள்பட டெல்லியிலிருந்து தலைவர்கள் படையெடுத்து தமிழகம் நோக்கி வருகிறார்கள் என்றும் கூறினார் 
 
மேலும் பிரதமர் உள்பட எத்தனை பேர் வந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு பூஜ்யம் தா என்றும், ஒரு தொகுதி கூட வெற்றி கிடைக்காது என்றும் கூறினார். இன்று வெளியான ஜூனியர் விகடன் தேர்தல் கருத்துகணிப்பிலும், பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றுதான் கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்