குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த திங்களன்று மக்களவையிலும் புதன் அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு உண்மையிலேயே திமுக எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் திங்கள் அல்லது புதன் கிழமையே போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். திங்கள், புதன் கிழமைகளில் பாராளுமன்றத்தின் முன் தர்ணா போராட்டம் நடத்தி இருந்தால் அந்த போராட்டத்திற்கு ஒரு வலு இருந்திருக்கும்.
ஆனால் இந்த சட்டம் மக்களவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்று அமலுக்கு வந்த பின்னர் பெயரளவிற்கு போராட்டம் நடத்துவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இனிமேல் எத்தனை போராட்டம் நடத்தினாலும் இந்த சட்டம் அமல் ஆவதை தடுக்க முடியாது என்று தெரிந்தும் இந்த போராட்டம் ஏன் என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது