ஜெ. இறந்த உடன் வெங்கைய்யா நாயுடு செய்த காரியம் என்ன தெரியுமா?: போட்டுடைத்த அதிமுக எம்பி!

வெள்ளி, 24 மார்ச் 2017 (10:21 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த அன்றே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அப்போது இதில் பாஜகவின் தலையீடு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டாலும் அதிமுக தரப்பு அதனை மறுத்தது.


 
 
ஆனால் தற்போது அதிமுக அம்மா அணியான சசிகலா அணியை சேர்ந்த அன்வர் ராஜா எம்பி தற்போது இந்த ரகசியத்தை செய்தியாளர்களிடம் போட்டுடைத்துவிட்டார். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு பின்னால் பாஜக இருப்பதாக அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பகிரங்கமாக கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் இரட்டை மின்கம்பம் சின்னமும், தொப்பி சின்னமும் இரு அணிக்கும் வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு அன்வர் ராஜா பேட்டி கொடுத்தார். அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு பாஜகவே காரணம் என பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டினார்.
 
மேலும், பன்னீர்செல்வத்தை பயன்படுத்தி, பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தவுடன் மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அவருடைய துணையுடன் பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது என்றார் பகிரங்கமாக.

வெப்துனியாவைப் படிக்கவும்