பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் ராஜினாமா: என்ன காரணம்?

வியாழன், 13 ஏப்ரல் 2023 (12:52 IST)
பாஜகவில் இருந்து கடந்த சில வாரங்களாக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்து வரும் நிலையில் தற்போது பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் எம் ஆர் கிருஷ்ண பிரபு என்பவர் ராஜினாமா செய்துள்ளார்.

ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகின்றனர் என்றும் அதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் பாஜக என்னை பழுது பார்த்து விட்டது என்றும் பாஜகவில் இருந்து விலகிய எம் ஆர் கிருஷ்ணா பிரபு கூறியுள்ளார்.

ஆருத்ரா மோசடியை சுட்டிக்காட்டி பாஜகவிலிருந்து அக்கட்சியின் பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் எம் ஆர் கிருஷ்ணா பிரபு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்