பாஜக சார்பில் யார் யார்? உத்தரவு வாங்க டெல்லி பறந்த முருகன்!!

வெள்ளி, 12 மார்ச் 2021 (10:41 IST)
தமிழகம், புதுச்சேரிக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அதிமுக தலைமை தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பட்டியலை வெளியிட்டது. 
 
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், கொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயமுத்தூர், விருதுநகர், அவரக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி (தனி), காரைக்குடி, தாராபுரம்( தனி) , மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே தமிழகம், புதுச்சேரிக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் டெல்லி புறப்பட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்