பொருத்தது போதும் பொங்கி எழு தமிழா: பாரதிராஜா ஆவேசம்!

வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:32 IST)
காசு மேல காசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்துக்கொண்டார். அங்கு மேடையில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசினார் அவர். பாரதிராஜா பேசியது பின்வருமாறு...
நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும். விழித்துக்கொள். டைனோசர் இனம் அழிய காரணம் அதனிடம் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான். அதுபோல நாமும் எதிர்த்து கேட்காவிட்டால் நம் தமிழ் இனம் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அழிந்துவிடும்.
 
ஆன்மிகவாதி என்று பலர் சொல்லிக்கொள்கிறார்கள். அப்படி பார்த்தால் நானும் ஆன்மிகவாதிதான். ஆறுபடை வீடுகளை ஆண்ட முருகன் சாதாரண மனிதன்தான். பின்னாளில் நாம்தான் கடவுள் ஆக்கிட்டோம். 

இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என நீ யாராக வேண்டுமேனாலும் இரு. ஆனால் ஆட்சியில் இருக்கும் ஐந்து வருடம் பிஎம்., சிஎம். என இரண்டு பேரும் காமன்மேனாக இருக்க வேண்டும். 
 
தமிழ் மொழி மீது கைவைப்பது உன் தாய் மீது, உன் சகோதரி மீது கைவைப்பது போன்றது. தமிழனுக்கு ருத்ரம் இப்போது அதிகமாக தேவைப்படுகிறது. மௌனமாக இரு, பொறுமையாக இரு, ஆனால் ருத்ரத்தைத் தொலைத்து விடாதே என்று பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்