சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பரத் விஷ்ணு- தினகரன் பாராட்டு

வியாழன், 25 மே 2023 (12:36 IST)
துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் சர்வதேச கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. இதில், 42 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் 17 பேர் கலந்துகொண்டு  4 பதக்கங்களை வென்ற நிலையில், தமிழக வீரர் பரத் விஷ்ணு அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூரைச் சேர்ந்த பரத் விஷ்ணு (14வயது) இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து, அமமுக தலைவர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னை தாம்பரம் முடிச்சூரை சேர்ந்த 14 வயது சிறுவன் பரத் விஷ்ணு தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

42 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் பரத் விஷ்ணு அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமையாகும்.

தங்கப்பதக்கம் வென்ற பரத் விஷ்ணு, அவரது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த தருணத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகின்றேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்