அரசு மருத்துவமனைகளில் சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும்! – ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

திங்கள், 6 பிப்ரவரி 2023 (13:30 IST)
இந்தியா கிளினிக்கல் நியூட்ரிசியன் காங்கிரஸ் - 2023   நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அரசு மருத்துவமனைகளில் சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும் என  வலியுறுத்தி உள்ளார்
 

சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற  ICNC எனப்படும் ஐஏபிஇஎன் இந்தியா கிளினிக்கல் நியூட்ரிசியன் காங்கிரஸ் - 2023 நிகழ்வின் அடிப்படை ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தில் உள்ள மக்களின் ஊட்டச்சத்து சிகிச்சையை மேம்படுத்துவது ஆகும்.

மேலும் ஊட்டச்சத்து பராமரிப்பு நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, புத்துணர்ச்சி, புதுப்பித்தல் மற்றும் கவனம் செலுத்துதல் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் மருத்துவ ஊட்டச்சத்து குழுவினர் தங்கள் கருத்துகளை பதிவு செய்ததோடு, பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் புவனேஷ்வரி, தேசிய தலைவர் மருத்துவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை,  மருத்துவ கருத்தரங்குகளில் பங்குகொள்ள  தனக்கு அழைப்பு வரும்பொழுது அதனை கடமையாகவும், முதன்மை பணியாகவும் ஏற்று கலந்துகொள்வதாக தெரிவித்தார்.
 

மருத்துவர்கள் எந்த ஆராய்ச்சி செய்தாலும், எதை கண்டுபிடித்தாலும் அது கடைகோடி மனிதனுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே தனது கோரிக்கை எனவும், அனைத்து அரசு மருத்துவமனைகளும் சிறந்த ஊட்டசத்துக்களை வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மதிய உணவு வழங்குவதில் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று கூறிய அவர்,தெலுங்கானாவில்  பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவும் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவராக தான் இருந்த பொழுது, தினம் ஒரு வாழைப்பழமும், முட்டையும், கடலை உருண்டையும் கொடுக்க சொல்லி அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.  இதன் மூலம் குழந்தைகளும் விவசாயிகளும் பலன் அடைவர் என்றும் அவர் கூறினார்.

புதுசேரியில் ஒரு முட்டை வழங்கி வந்த  நேரத்தில், தனது முதல் கையெழுத்தில்  3 முட்டைகள் வழங்க ஏற்பாடு செய்ததாக தமிழிசை தெரிவித்தார்.

IAPEN அமைப்பு பேரன்டல் அண்டு எடேர்னல் நியூட்ரிசியன் அமைப்புகளான அமெரிக்காவின் ASPEN மற்றும் ஐரோப்பாவின் ENPEN ஆகிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே அமைப்பு ஆகும். இதன் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளது. உணவு மற்றும் பெற்றோர் ஊட்டச்சத்து துறையில் அறிவின் வளர்ச்சி மற்றும் பரவலுக்கு தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வரும் அமைப்பு ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்