அற்புத மருத்துவ குணங்களை கொண்ட முள் சீத்தாப்பழம் !!

புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:15 IST)
முள் சீத்தா பழம் பல அபூர்வ சத்துக்களையும், மருத்துவக் குணங்களையும் கொண்டது. முள் சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப் பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.


வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ், புரோட்டின், நார்ச்சத்து நிறைந்துள்ளன. முக்கியமாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றன. வயிறு, மார்பு, நுரையீரல், கணையம், மலக்குடல் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தக்கூடியது.

புற்றுநோய்க்கான கீமோதெரப்பி முறையைப் பயன்படுத்தினால், முடி கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகியவற்றுடன், மேலும் பல பக்க விளைவுகள் உண்டாகும். ஆனால், முள் சீத்தா அதுபோன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளையும் முள் சீத்தாப்பழம் சரிசெய்யும். பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னையையும்கூட இந்தப் பழம் குணப்படுத்தும்.

10 முதல் 12 முள் சீத்தா இலைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, அதை அரை லிட்டராக ஆகும் வரை கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதனை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான முறையில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்வது நல்லது.

இந்தப் பழத்தை முறையாக சுத்தம் செய்து, அளவாகப் பயன்படுத்துவதுதான் நல்லது. இந்த பழமும் இதன் இலைகளும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளைத் தீர்க்கக்கூடியது. நம் நாட்டில் "முள் ஆத்தன்காய்" என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். முள் சீத்தா பழம் கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இயற்கையாக விளைகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்