நம்பிக்கை துரோகி எடப்பாடி.! பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி..! அண்ணாமலை காட்டம்.!

Senthil Velan

வெள்ளி, 5 ஜூலை 2024 (14:59 IST)
நம்பிக்கை துரோகி என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் பொருந்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
விழுப்புரத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும்போது, தமிழகத்தில் அதிகாரம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் பச்சைப்பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டினர். அந்தந்த மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்தும்போது மத்திய அரசு தடுப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியை நோக்கி அதிமுக தொண்டர்கள் படையெடுத்து வருவதாக குறிப்பிட்ட அண்ணாமலை,  நம்பிக்கை துரோகி என்ற பெயர் எடப்பாடிக்கு பொருந்தும் என்று கூறினார். சிலரின் சுயலாபத்திற்காக அதிகார வெறிக்காக, கண்முன்னால் அதிமுக அழித்துக்கொண்டிருக்கிறார் என்றும் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி கொடுத்த 134 வாக்குறுதிகளை எம்பிக்களே இல்லாமல் எப்படி நிறைவேற்றுவார் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்
 
கோவையில் 9-ல் 7 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுக, தங்கள் கோட்டை என கூறிக்கொள்ளும் கோவையில் தோல்வி அடைந்தது ஏன் என்றும் வெறும் டெபாசிட் வாங்கியும் வீர வசனம் பேசுகிறார் எடப்பாடி என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.  அதிமுக கரையான் போல கரைகிறது என்றும் கூறினார். 
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததற்கு புதுப்புது காரணங்களை எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாக தெரிவித்த அண்ணாமலை, தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை அதனால் இடைத்தேர்தலை புறக்கணித்ததாக கூறும் எடப்பாடி, சட்டம் ஒழுங்கு சரியில்லை எனில் 2026 சட்டசபை தேர்தலையும் புறக்கணிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

ALSO READ: பிரிட்டன் தேர்தலில் சாதனை படைத்த தமிழ் பெண்..! குவியும் பாராட்டு..!!
 
மேலும் பாஜக உங்களுக்கு அடிமையாக இருப்பதற்கு இல்லை என்றும் தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்கவே பாஜக இருக்கிறது என்றும் அவதரித்தார்.  தனது அருகில் நிற்கவைத்து அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். அதிமுகவை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிச்சாமி, தனக்கு அறிவுரை கூற வேண்டியதில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்