கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்- அமைச்சர் எல். முருகன் கண்டனம்

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (19:57 IST)
ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயில் இன்று முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியுள்ள நிலையில், இன்று அமாவாசை என்பதால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

இன்று காலையில் கூட்ட நெரிசலில் போலீஸார் பக்தர்களை வரிசைப்படுத்த முயன்றபோது வெளிமாநில ஐயப்ப பக்தர்களுக்கும், காவலர்களுக்கும் வாக்குவாதம் எழுந்து கை கலப்பாக மாறியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  விவகாரம் தொடர்பாக   மத்திய அமைச்சர் எல்.முருகன்   ''தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது’’என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும்  தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்..!

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை..!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை.

இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிபார்க்க முடியும்..!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்