'கலைஞர் திமுக' உதயமா? அழகிரியின் மெகா பிளான்?

திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (21:57 IST)
அதிமுகவில் எம்ஜிஆர் மறைந்தபோதும், ஜெயலலிதா மறைந்தபோதும் அக்கட்சி இரண்டாக பிளந்தது என்பது அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் அறிந்ததே. அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவினால் திமுக இரண்டாக பிளக்க வாய்ப்பு இருப்பதாகவும்,  'கலைஞர் திமுக' என்ற கட்சியை மு.க.அழகிரி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் ஒன்ரில் பேசிய பத்திரிகையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
 
இன்று காலை ஏற்கனவே தலைவரின் விசுவாசிகள் தனது பக்கம் இருப்பதாகவும், தனது ஆதங்கம் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிப்பேன் என்றும் மு.க.அழகிரி கூறியிருந்த நிலையில் நாளை நடைபெறும் செயற்குழு அதனையடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் அழகிரியை திமுகவில் சேர்க்கும் முடிவை ஸ்டாலின் எடுக்கவில்லை என்றால் 'கலைஞர் திமுக' உதயமாவது உறுதி என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
 
அவ்வாறு 'கலைஞர் திமுக' என்ற கட்சியை அழகிரி ஆரம்பித்தால் திமுகவில் உள்ளவர்கள் எத்தனை பேர் விலகுவார்கள் என்று தெரிந்துவிடும் என்றும் அதன்பின்னர் ஸ்டாலினுக்கு அரசியல் செய்வது எளிது என்றும் இன்னொரு பத்திரிகையாளர் கருத்து தெரிவித்ததோடு, அழகிரி கட்சி ஆரம்பிக்காமல் பயமுறுத்தி கொண்டே இருப்பது மட்டுமே இப்போதைக்கு புத்திசாலித்தனம் என்றும் அவர் கூறினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்