மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பிறகு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரியிடம் கட்சியில் அவரை சேர்ப்பது குறித்து குடும்பத்தினரிடம் பேசி சரிசெய்யலாமே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, குடும்ப உறுப்பினர்கள் யாரும் நான் கட்சியில் இணைவது குறித்து பேசியதில்லை. அவர்களுக்கு அக்கறையும் இல்லை என்று கூறினார்.