கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதேபோல், வேறு நெட்வொர்க் பயன்படுத்துபவர்களால், ஏர்செல்லை பயன்படுத்துபவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்தனர். அதோடு, ஏர்செல் நெட்வொர்க் இனிமேல் இயங்காது என்ற செய்தியும் பரவியது.
ஆனால், தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தற்காலிகமாக சேவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகி விடும் என ஏர்செல் நிறுவனம் சார்பில் நேற்று கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னை அருகே உள்ள தாம்பரத்தில் உள்ள ஒரு ஏர்செல் சேவை மையத்தின் முன்பு இன்று காலை பலர் திரண்டனர். அப்போது அலுவகம் பூட்டப்பட்டது. எனவே, கோபமடைந்த சிலர் கற்களை கொண்டு தாக்கினர். இதில், அலுவகத்தின் பெயர் பலகை, பேனர்கள் கிழிந்து தொங்கின. அதன் பின் அங்கு போலீசார் சென்று அவர்களை கலைய செய்தனர்.