சென்னையில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மீது ஆசிட் வீச்சு

திங்கள், 19 பிப்ரவரி 2018 (13:30 IST)
சென்னையில் பெண் ஊழியர் மீது ஆசிட் ஊற்றி தீ வைத்த தனியார் ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் ஆசிட் வீசும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வக்கிர புத்தி கொண்ட சில ஆண்கள் ஒரு தலைக் காதல் காரணமாக பல பெண்கள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்க்கையையே கெடுத்து விடுகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை மடிப்பாக்கத்தில் ராஜா என்பவர் தனியார் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார்.   இங்கு யமுனா என்ற பெண் பணியாற்றி வந்தார்.  வழக்கம் போல் பணிக்கு வந்த யமுனாவிற்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. யமுனா கூச்சலிடவே ஆத்திரமடைந்த ராஜா யமுனா மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் படுகாயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதையடுத்து, யமுனா மீது ஆசிட் ஊற்றி எரித்த ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுபோல் செய்யும் கொடிய மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்