கடந்த ஜூன் 9 ஆம் தேதி மது அருந்திவிட்டு வந்த முதல்நிலை காவலர் ஜாகிர் உசேன், புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உடன் வாக்குவாததில் ஈடுபட்டதுடன் அவரை மதுபோதையில் கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாலசுப்பிரமணியம் புகார் அளித்ததன்பேரில் , ஜாகிர் உசேன் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த பிரச்சனை தொடர்பால விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அந்த மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமார் ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.