பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், கைலாஷ் என்ற ஒரு தனிநாட்டை அறிவித்து அந்த நாட்டிற்கு பாஸ்போர்ட் விசா வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்
மேலும் இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் குடிமகனாக தகுதி உடையவர்கள் என்றும், ஏற்கனவே இந்த நாட்டில் 10 கோடி பேர் குடிமகனாக பதிவு செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாட்டின் பிரதமராக அவர் தன்னைத்தானே அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது