கண்ணி வைத்து காத்து கொண்டிருந்த மத்திய அரசிடம் வசமாக சிக்கிய சசிகலா!

திங்கள், 6 பிப்ரவரி 2017 (13:20 IST)
தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் அவர் இன்னும் ஓரிரு தினங்களில் பதவியேற்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு வழங்கி வந்தது. ஆனால் சசிகலா முதல்வராக முயற்சித்து வந்தார். அவர் முதல்வராவதை விரும்பாத மத்திய அரசு அவருக்கு தற்போது சொத்துக்குவிப்பு வழக்கு மூலம் நெருக்கடியை கொடுத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், உளவுத்துறை மூலம் உடனுக்குடன் பிரதமர் மோடிக்கு தகவல் செல்வதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் சசிகலா முதல்வராக அறிவிக்கப்பட்ட மறுநாளே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது சசிகலாவுக்கு வைக்கப்பட்ட செக் என பலரும் பேசி வருகின்றனர்.
 
உச்ச நீதிமன்றம் திடீரென சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது, கண்ணி வைத்து காத்துக்கொண்டிருந்த மத்திய அரசிடம் வசமாக சசிகலா மாட்டியிருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்