அப்பாவி பெண்ணை கன்னத்தில் அறைந்த அதிகாரிக்கு பதவியுயர்வு

செவ்வாய், 13 ஜூன் 2017 (22:50 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் உள்பட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.



 


அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பெண் ஒருவரை திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். கன்னத்தில் அறைவாங்கிய ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு காது கேட்கும் திறன் குறைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பெண் என்றும் பாராமல் அப்பாவி ஒருவரை தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு அளித்துள்ளது. இது போராட்டம் செய்த பொதுமக்களை மேலும் வெறுப்படைய செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்