கோமதிக்கு 4 ஆண்டு தடை; பறிக்கப்படும் தங்க பதக்கம்?

புதன், 22 மே 2019 (09:01 IST)
கோமதி மாரிமுத்துவின் ஊக்கமருந்து சர்ச்சையால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை மற்றும் அவரது பதக்கம் பறிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.  
 
ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக முதல்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஆனால் இதுகுறித்து இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்வேல் சுமாரிவல்லா அதிகாரபூர்வ தகவல் எதுவும் தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல் தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டை பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார். 
கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி, கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், பிசிஐ செய்தி நிறுவனம் இது குறித்து அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோமதி இரண்டாவது கட்ட ஊக்க மருந்து சோதனையிலும் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவரைடம் இருந்து தங்க பதக்கம் பறிக்கப்படுவதோடு, 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என உயர் அதிகாரி ஒப்ருவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மேலும், ஊக்க மருந்து சோதனையில் கோமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்