12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. இன்று காலை கைதான நாதக முன்னாள் நிர்வாகிக்கு கால் எலும்பு முறிவு..!

Mahendran

திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (11:51 IST)
12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கிருஷ்ணகிரி அருகே பன்னிரண்டு வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கோவையில் பதுங்கி இந்த அவரை பிடிக்கச் சென்றபோது தப்பி ஓடியதாகவும் இதனை அடுத்து அவர் கீழே விழுந்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது என்பதும் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்