இந்த கட்சியெல்லாம் பழைய காரு.. நாங்க புது கார்.. புது ட்ரைவர்! – அர்ஜுனமூர்த்தி அரசியல் எண்ட்ரி!

வியாழன், 28 ஜனவரி 2021 (12:42 IST)
ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்ததுடன் பாஜகவிலிருந்து வந்த அர்ஜுன மூர்த்தியை கட்சி ஆலோசகராக நியமித்தார். ஆனால் உடல்நிலை காரணமாக அவரால் கட்சி தொடங்க முடியாமல் போனது.

இந்நிலையில் நடிகர் ரஜினி விரும்பிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளதாக அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள அவர் ”தற்போது உள்ள அரசியல் கட்சிகள் பழைய ஃபியட், அம்பாசிடர் கார்கள் போன்றவை. நாங்கள் புதிய காரில் புதிய டிரைவருடன் வலம் வருவோம். ரஜினிகாந்த் மனம் நோகும்படி நான் எதுவும் செய்யமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்