சசிகலா முதல்வராக வேண்டும் என அவரது கட்சியினர் அவரை புகழ்ந்து பேனர்கள் வைப்பது, நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் புகைப்படம் போட்டு சசிகலாவை புகழ்ந்து அவரது முகம் நாடாளும் முகம் என விளம்பரம் கொடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில், இது நாடாளும் முகம் மக்கள் கருத்து மட்டுமல்ல... முகம் பார்த்து ஜாதக பலன் கூறும் ஜோதிட ஜாம்பவான் சிவதிரு. பிரசன்னா சுவாமியின் கருத்தும் கூட என கூறப்பட்டுள்ளது. மேலும் சசிகலா ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் ஆதரவு பெற்றவர் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.