பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பங்குனி உத்திரத்திருநாள் ஏப்ரல் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட உள்ளத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாநில அரசு அலுவலர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார்.