அதிமுகவை பொறுத்தவரை ஜூன் 23ம் தேதி நிலைமையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், பொதுக்குழு கூட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
இந்நிலையில் அதிமுகவில் நடப்பது குறித்து சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளதாவது, அதிமுக உட்கட்சி பிரச்சிசனை, ஒன்னும் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல. சட்டமன்ற அதிமுக துணைத்தலைவர் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவரே கூறியுள்ளார்.
சட்டப்பேரவை வேறு, நீதிமன்றம் வேறு. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கடிதங்கள் குறித்து, யார் மீதும் விருப்பு, வெறுப்பில்லாமல் ஜனநாயக முறையில் நடவடிக்கை இருக்கும். 4 பிரிவாக அதிமுகவினர் உள்ளனர். அவர்கள் பிரச்சனையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை என்று கூறினார்.