இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் படிக்க ஊக்குவிக்கும் வகையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளி ,கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற வேண்டி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இளம் ஐடிஐ, டிப்ளமோ,பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்வி, பி.இ., பி,டெக் படிக்கின்ற மாற்றுத்திறனாளிகள் ரூ.1000 முதல் ரூ.7000 வரை உதவித் தொகை வழங்கப்படும் எனவும்,9 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 முதல் 6000 வரை வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.