ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்பது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரை அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் சந்திக்கிறார்.
பின்னர் இருவரிடமும் ஏதோ பேசுகிறார். பின்னர் மன்னிப்பு கேட்பது எழுந்து நின்று கைகூப்பி கூறிவிட்டு தனது இருக்கையில் மீண்டும் அமர்கிறார். இந்த வீடியோவை பாஜகவினர் சிலர் இணையத்தில் வைரலாகிய நிலையில், அதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, தமிழக பாஜக சார்பாக, மதிப்பிற்குரிய வணிக உரிமையாளருக்கும் எங்கள் மாண்புமிகும் இடையே தனிப்பட்ட உரையாடலைப் பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னபூர்ணா உணவகங்களின் மதிப்பிற்குரிய உரிமையாளரான திரு.சீனிவாசன் அவர்களுடன் நான் பேசினேன் என்றும் இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார் என்றும் மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.