2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை.. என்ன காரணம்?

Siva

புதன், 3 செப்டம்பர் 2025 (18:31 IST)
முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு மத்திய பா.ஜ.க.வில் ஒரு முக்கிய தேசியப் பதவி வழங்க தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதை பா.ஜ.க. தலைமை விரும்பவில்லை என்றும், அண்ணாமலையின் திறமைக்கு ஏற்ற வகையில் தேசிய அளவில் ஒரு முக்கிய பதவி வழங்கப்படும் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பா.ஜ.க. தலைமை, அண்ணாமலை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும்,அவரை தேசிய அரசியலுக்கு உயர்த்துவது குறித்து  பரிசீலித்து வருகிறது. 
 
தமிழக பா.ஜ.க.வில் உள்ள உட்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சரை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், தமிழக பா.ஜ.க.வில் உள்ள உட்கட்சி பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அவருக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
 
அண்ணாமலையின் இந்த அடுத்தகட்ட நகர்வு, தமிழக பா.ஜ.க.வின் எதிர்கால அரசியல் பாதையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்