மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் சில சக்திகள் தடுத்துவிட்டது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..!

Mahendran

சனி, 30 ஆகஸ்ட் 2025 (12:06 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்றும், அதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்தபோது, தமிழ், தமிழ்க் கலாசாரம் பற்றிப் பேசிய சில சக்திகள் அவருக்கு ஆதரவு தராமல் தடுத்ததாகவும், அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
 
போதைப்பொருள் மற்றும் சாராயப் புழக்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்வதை நாம் கடமையாகக் கொள்ள வேண்டும். இந்தக் கூட்டணியை நல்லபடியாக நடத்தி, பக்குவமான தலைவர்களின் வழிகாட்டுதலில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, தமிழகத்தில் நல்லாட்சி அமைய உழைக்க வேண்டும். இதுவே மூப்பனாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்" என்று அவர் பேசினார்.
 
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். மற்றும் அண்ணாமலை அருகருகே அமர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்